பிக்பாஸ் பார்ட்டியில் ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட லாஸ்லியா கவின்.. இணையத்தில் வைரல்!

பிக்பாஸ் சீசன் 4 கிராண்ட் பினாலே கடந்த ஞாயிற்றுகிழமை கோலகலமாக நடைப்பெற்று, ஆரி பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றார்.

பாலா ரன்னர் அப் ஆனார். இதையடுத்து, இதனை கொண்டாடும் விதமாக பிக்பாஸ் போட்டியாளர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடினர். இதில் திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

மேலும், பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் ஆன லாஸ்லியா, கவின் இருவரும் பிக்பாஸ் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆஜித்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.