அட உங்க கையில் இந்த முக்கோண வடிவ ரேகை இருக்கா? அப்போ நீங்க தான் அதிர்ஷ்டசாலியாம்!

கைரேகை ஜோதிடத்தை பொருத்த வரை கைகளில் உள்ள ரேகையை பொருத்து நம் வாழ்வில் நன்மை தீமைகளை நம்மை வந்து சேர்கின்றன.

இந்நிலையில் கைரேகை கோடுகள் இணைந்து நிறைய முக்கோண வடிவங்களை நமது கைகளில் உருவாக்குகிறது.

இந்த முக்கோண வடிவங்களைக் கொண்டு நிறைய பலன்களையும் கைரேகை ஜோதிடம் கூறுகிறது.

இதில் உங்கள் கையில் எந்த இடத்தில் இந்த முக்கோண வடிவம் இருந்தால் என்ன என்ன எப்பலனை தருகின்றது என்று பார்ப்போம்.

நடுவில் முக்கோண வடிவம்

உள்ளங்கையின் நடுப் பகுதியில் முக்கோண வடிவம் அமைந்திருந்தால் நல்லது நடக்கும் என்பதை குறிக்கிறது.

இது உங்களுக்கு தொழில் ரீதியாக நடக்கும் நன்மைகளையும், உங்களுக்கு தலைமை பண்பு கிடைக்கும் என்பதையும் குறிக்கிறது.

அதே நேரத்தில் திருமண வாழ்க்கை சந்தோஷமாகவும் மன அழுத்தம் இல்லாமல் இருக்கும் என்பதை காட்டுகிறது.

திருமண முக்கோணம்

படத்தில் காட்டியுள்ளவாறு திருமண ரேகையில் முக்கோண வடிவம் அமைந்திருந்தால் உங்கள் திருமண வாழ்க்கை செழிப்பாக இருப்பதை குறிக்கிறது.

அதாவது திருமணத்திற்கு பிறகு உங்கள் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். மேலும் திருமணத்திற்கு முன்பு இருந்து வந்த நிதி சம்பந்தமான பிரச்சினைகளும் தீர்ந்து போகும்.

தலை ரேகை

படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் தலை ரேகையில் முக்கோண வடிவம் அமைந்திருந்தால் உங்கள் வாழ்க்கையிலும் கல்வியிலும் வெற்றி பெறும் நபராக விளங்குவீர்கள்.

சாதகமான செயல்களை புரிந்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

ஆயுள் ரேகை

படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் ஆயுள் ரேகையில் வடிவம் தென்பட்டால் நீங்கள் மிகவும ஆற்றலுடன் செயல்படும் நபராக இருப்பீர்கள்.

நீங்கள் செய்யும் செயல்கள் உதவிகள் முதலாளிகளாலும், சக ஊழியர்களாலும் பாராட்டப்படும்.

மணிக்கட்டில் முக்கோண வடிவம்

உங்கள் மணிக்கட்டு பகுதியின் நடுவில் முக்கோண வடிவம் தென்பட்டால் நீங்கள் பிறக்கும் போதே ஆசிர்வதிக்கப்பட்டவராகவும், அதிர்ஷசாலியாகவும் இருப்பீர்கள்.