உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி போட்டுருங்க!!

வீட்டில் ஒரு சில பொருட்களை வைப்பதன் மூலமாக அதிஷ்டம், அன்பு, சொத்துக்கள் மற்றும் பலதரப்பட்ட நன்மைகள் போன்றவை கிடைக்கும்.

அதே சமயத்தில் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களால் தீமைகளும் ஏற்படுகின்றன. மேலும் தீமைகளை ஏற்படுத்தும் எந்தெந்த பொருட்கள் வீட்டில் இருக்க கூடாது என்பதைப் பற்றி பார்ப்போம்.

மூழ்கிய கப்பல்

வீட்டில் மூழ்கும் கப்பலின் படத்தை வைத்தால் அதன் கடைசி கட்டத்தை எட்டுவது போல, வீட்டில் உள்ளவர்கள் வாழ்வும் அழிந்து விடும் என்பதை குறிக்கின்றது. எனவே அப்படி பட்ட படங்களை வீட்டில் வைத்திருக்க கூடாது.

அழுகின்ற குழந்தையின் படம்

வீட்டில் அழுகின்ற குழந்தையின் படம் இருந்தால் அவை வீட்டிற்கு கெட்ட சக்தியை கொண்டு வரும். மேலும் வீட்டில் எப்பொழுதும் ஒரு மனசோர்வு இருந்து கொண்டே இருக்கும். அதற்கு பதிலாக குழந்தை கிருஷ்ணர் வெண்ணெய் உண்ணும் படத்தை வீட்டில் வைக்கலாம்.

உடைந்த சிலைகள்

வீட்டில் உடைந்த சிலைகள் வைப்பது வீட்டில் கேட்ட சக்தியையும் நிறைய பிரச்சனைகளையும் குடும்ப உறுப்பினர்களுக்கு வரவைக்கும்.

வீட்டில் உடைந்த கடவுள் சிலைகள் இருந்தால், அவை ஓடுகின்ற தண்ணீரிலோ அல்லது பச்சை மரத்தின் வேரிலோ வைக்க வேண்டும்

போர்க்களத்தின் படம்

வீட்டின் சுவர்களை யுத்த காட்சிகள் அல்லது மகாபாரதத்தின் ஏதேனும் ஒரு காட்சி உள்ள படங்களை வீட்டில் வைத்தால் வீட்டில் போர்க்களம் போன்ற நிலைமையை உண்டாக்கும்.

நடராஜரின் படம்

நாட்டியம் ஆடுபவர்களின் வீட்டில் ஆடும் நடராஜர் படம் இருப்பது இயல்பானது. ஆனால் இந்த சிலை அமங்கலமானது. இந்த சிலை ஆடும் சிவபெருமானைக் காட்டுகிறது, ஆனால் இது அழிவையும் ஆரோக்கிய கேட்டையும் குறிக்கின்றது.

உடைந்த கண்ணாடி

வீட்டில் உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால் அவை கெட்ட சக்தியை வீட்டிற்குள் கொண்டு வரும். எனவே வீட்டில் உடைந்த கண்ணாடியை வைத்திருக்காதீர்கள். ஒருபோதும் உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்காதீர்கள்.

காய்ந்த செடிகள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, காய்ந்த சருகான, முட்களை உடைய செடிகளை வைத்தால் வீட்டில் செல்வாக்கு மற்றும் செல்வம் பெருகுவதற்கு தடை செய்கின்றன. எனவே எப்பொழுதும் காய்ந்த இலைகளை செடியை விட்டு எடுத்து விடுங்கள்.

ஒழுகும் குழாய்

வீட்டில் உள்ள குழாயில் ஒழுகும் தண்ணீரினால் தண்ணீர் மட்டும் குறையாது வீட்டில் உள்ள செல்வமும் சேர்த்து குறையும்.

அழுக்கான நுழைவாயில்

வீட்டின் நுழைவாயிலின் முன் அல்லது அருகே குப்பையை வைக்க வேண்டாம். அது வீட்டினுள் கெட்ட சக்தியை கொண்டு வரும்.

நின்றுபோன கடிகாரம்

வீட்டில் நின்று போன கடிகாரம் கெட்ட சக்தியையும் கொண்டு வரும். மேலும் வீட்டில் செல்வம் மற்றும் செல்வாக்கை பாதுகாக்க, நின்று போன கடிகாரத்தை வீட்டை விட்டு அகற்றுங்கள் அல்லது பேட்டரியை மாற்றுங்கள்.