மீன் பொறிக்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால் நொடி பொழுதில் நடக்கும் அதிசயம்!

அசைவம்” – இந்த ஒரு வார்த்தை போதுமே நமது அனைவரின் நாவிலும் எச்சி ஊற வைக்க…’பொதுவாக சைவத்தை விட அசைவம் என்றால் பலருக்கும் மிகவும் பிடிக்கும்.

அசைவ பிரியர்களுக்கு சிக்கன், மீன், ஆடு போன்ற பல வகை உணவுகளும் ரொம்ப இஷ்டம்தான்.

உலக அளவிலும் சைவ வகை உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகள்தான் பல வகைகளாக உள்ளது.

வகை வகையான அசைவ உணவுகளை செய்து வைத்தால் அசைவ பிரியர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அசைவ உணவுகள் அவ்வளவு ருசியாக இருக்கும். சிறிதளவு சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் அதிகம் சாப்பிட தூண்டும்.

அதிலும் குறிப்பாக மீன் என்றால், பலருக்கும் மிகவும் பிடித்த அசைவ உணவு. அந்த மீன்களில்தான் மனிதர்களுக்கு தேவைப்படும் அதீத சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

அத்தகைய மீன்களை பொறிக்கும் போது வரும் வாசனை நமது வீட்டை தாண்டி தெருவெங்கும் மணக்கும்.

ஆனால் அது நமக்கு வாசனையாக இருந்தாலும் சிலருக்கு துர்நாற்றமாக இருக்கும் ஆகவே மீன் பொறியல் வாசனை நமது வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க நாம் மீன் பொறிக்கும் போது அடுப்பின் பக்கத்தில் பெரிய மெழுகுவத்தி ஒன்றை சும்மாவே ஏற்றி வையுங்கள்.

அப்புறம் பாருங்க்கள் நீங்கள் சமைக்கும் மீன் பொறிக்கும் வாசனை நம் வீட்டைவிட்டு தாண்டாமல் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்.