காதலியால் கழட்டி விடப்பட்ட மகனுக்கு .. அம்மா செய்த தரமான அட்வைஸ்.. லட்சம் பேரை நெகிழ வைத்த வீடியோ..!

காதல் இரு இதயங்களை மட்டும் இணைப்பது இல்லை. இரு குடும்பங்களையும் இணைப்பது. லைலா_மஜ்னு, ரோமியோ_ஜூலியட் என காதலுக்கு முன்னுதாரணமான மனிதர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்த தலைமுறை காதல் அப்படியானது இல்லை. ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் அவசரம்..என கழுகுப்படத்தில் வரும் பாடல் வரிகளும், சமுத்திரகனி இயக்கி சசிகுமார் நடித்த நாடோடிகள் படக் காதலும் இன்றைய காதலின் நிலையைப் பேசும். இப்படியான சூழலில் ஒரு தாய், தன் மகனுக்கு செய்யும் காதல் அட்வைஸ் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த அந்தக் குறும்படத்தில் மகன் முதலில் காதலில் துள்ளிக் குதிக்கிறார். அதன் பின்னர் அந்த பெண்ணுடனான அவரது காதல் பிரேக்கப் ஆகிறது. இதைத் தொடர்ந்து அவர் இன்னொரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்ல அப்போது அவரது தாய் செய்யும் காதல் குறித்த அட்வைஸ் நெட்டிசன்களின் வாழ்த்தைக் குவித்துள்ளது.