வசதியான குடும்ப பெண்! செல்போன் டவரை வைத்து காட்டுப்பகுதியில் மனைவியை தேடி சென்ற கணவனுக்கு ஏற்பட்ட மிக பெரிய அ திர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியை காட்டுப்பகுதியில் மர்மமாக இ றந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காண்டீபன். இவர் மனைவி புவனேஸ்வரி (32).

அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த புவனேஸ்வரி சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.

சில தினங்களுக்கு அவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றி, நான் இனி யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என்று வைத்தார்.

இதைப்பார்த்த புவனேஸ்வரியிடம் நடனம் பயின்று வரும் மாணவி ஆசிரியைக்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர் போனை எடுக்காததால், புவனேஸ்வரியின் கணவரிடம் இதை மாணவி கூறியுள்ளார். இதனையடுத்து கணவர் காண்டீபன் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

செல் போனை எடுக்காததாலும், வெகுநேரமாக வீட்டுக்கு வராததாலும் காண்டிபன் பொலிசில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் புவனேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. போனை யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த பொலிசார், செல்போன் இருக்கும் இடத்தை டவர் மூலம் கண்டறிந்தனர்.

பின்னர் சாலையின் இருபுறமும் உள்ள காட்டுப்பகுதியில் கணவரை அழைத்து சென்று பொலிசார் தேடினர். அங்கு இருந்த ஒரு மரத்தில் புவனேஸ்வரி தூக்கில் பி ணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்தபோது, த ற்கொலை செய்ய முடிவெடுத்த ஆசிரியை முதலில் சுகர் மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.

அதில் சாகாததால், கை நரம்பை அறுத்துக்கொண்டு த ற்கொ லைக்கு முயன்றுள்ளார்.அதிலும் சாகாததால் கடைசியாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து புவனேஸ்வரி உடலை மீட்டு உ டற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

புவனேஸ்வரி தனது மரணத்திற்கான காரணம் குறித்து கைப்பட எழுதிய டைரியை பொலிசார் கைப்பற்றி உள்ளனர். அதில் வாட்ஸ்ஆப்பில் வைத்திருந்த ஸ்டேட்ஸையே எழுதி வைத்துள்ளார்.

வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த அவர் பன்முக திறமையாளராக இருந்த நிலையில் அவர் ம ரண வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.