ஒரு மா மரம்..50 மரங்களுக்கு இணையாக காய்த்துக் குலுங்கும் அதிசயம்.. சாதித்துக் காட்டிய சாமானிய விவசாயி..!

கொரோனா காலம் அனைவருக்கும் தற்சார்பு வாழ்க்கைக் குறித்து உணர்த்தியிருக்கிறது. பலரும் இப்போது செடி, கொடி, மரம் என வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் விவசாயி ஒருவரின் ஒரே ஒரு மா மாரத்திலேயே 50 மரங்களுக்கு இணையாக காய்த்து குலுங்குவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘’திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் அல்ஹாஜ்.பி.எம்.ஜலால்தீன். வயதால் 75 தொட்டுவிட்ட இவர், விவேகமும், வேகமும் நிறைந்த ஆற்றல் மிகுந்த விவசாயி. இவரது தோட்டத்தில் இவர் சோதனையாக 12 வகையான வித்தியாசமான மாவினங்களை ஒட்டுமுறையில் செய்தார். இப்போது இவை காய்ப்புக்கு வந்துள்ளது.

ஒவ்வொரு கிளையிலும் கொத்து, கொத்தாக திராட்சைப் பழம் தொங்குவது போல் இவை காய்த்து குலுங்குகிறது. இதுபற்றித் தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் இதை ஆர்வத்தோடு வந்து பார்த்து செல்கின்றனர்.

பொதுவாக அரசு அதிகாரிகள் , தோட்டக்கலைத்துறையினர் சொல்வதையே அப்படியே செய்பவர்களுக்கு மத்தியில் தன் புதுமையான சிந்தனையால் சாதித்து இருக்கும் இந்த சாமானிய விவசாயியை பலரும் பாராட்டிவருகின்றனர்.

புகைப்படம்