டம்மி பீஸ்ங்கள வெளியேத்தினா இதுதான் நடக்கும்! பிக்பாஸ் சீசன் 4 ஐ விமர்சித்த பிரபல நடிகர்! உள்ளே போகிறாராம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 சமீபத்தில் தான் 50 வது நாளை கடந்தது. கடந்த மூன்று சீசன்களையும் பார்த்துவிட்டு ஓர் அணுகுமுறை இம்முறை போட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்பது வெளிச்சமாக தெரிகிறது.

இருந்தால் அவ்வப்போது சில வாக்குவாதங்கள், மோதல்களில் சிலர் வெடித்து விடுகிறார்கள். 50 ம் நாளுக்கு பிறகு மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது.

இந்த சீசனில் வந்த வேகத்தில் மக்கள் மனதை அதிகம் ஈர்த்தது பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி தான். என்ன மாயமோ, சூழ்ச்சியோ அவர் வெளியேற்றப்பட்டார்.. கண்டெண்ட் இல்லாமல் போய்விட்டது.

துடுக்காக பேசும் சனம், முரண்டு பிடிக்கும் பாலா, முகத்தை தூக்கி வைத்திருக்கும் அனிதா, பரிதாபமாக அர்ச்சனா, குழப்பத்தில் நிஷா என ஒவ்வொருவரையும் சொல்லிவிடலாம்.


இந்நிலையில் நடிகர் பரத் பிக்பாஸ் சீசன் 4 ல் டம்மி பீஸ்களை வெளியேற்றினால் எந்த கண்டெண்ட்டும் இருக்காது என நினைக்கிறேன் என வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.