உனக்கு தகுதியே இல்ல.. சம்யுக்தா-அர்ச்சனாவுக்கு நெட்டிசன்கள் போட்ட குறும்படம்..

கடந்த சில வாரங்களாகவே ஆரி – சம்யுக்தா இடையே அவ்வப்போது புகைந்து வருகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பலரும் ஆரி, அனிதா, சனம் ஆகியோர் ஒரு குழுவாக செயல்படுவதாக கூறி வரும் நிலையில் கால் சென்டர் டாஸ்க்கில் சனம் ஷெட்டியிடம் போனில் பேசிய சம்யுக்தா.

நீங்க பார்க்க அழகாக இருந்தாலும் வாயை திறந்தால் கலீஜ் பாஷை வரும் என கூற, இதைக் கேட்டு கடுப்பான சனம் உங்கள் மனதில் கலீஜ் இருந்தால் தான் அந்த வார்த்தை வாயில் வரும் என்றார்.

கேப்டன் டாஸ்கில் உங்களுக்கு சொந்த புத்தி இல்லை என சனம் கூற, நான் கேப்டன் ஆனதில் மற்றவர்களுக்கு இவ்வளவு வெறுப்பு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களுடைய வளர்ப்பு அப்படி என சம்யுக்தா கூறினார்.

இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்ததை அடுத்து ஆரி, தன் தந்தையும், வளர்ப்பும் பற்றி என்ன தெரியும் என சம்யுக்தாவிடம் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அர்ச்சனா – சம்யுக்தா இருவரும் இரவில் தனியாக அமர்ந்து பேசும் வீடியோவை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர். அதில் பேசும் அர்ச்சனா, “இவர்கள் சொல்வது எனக்கு பிரச்னை இல்லை. இவர்களெல்லாம் சொல்வதை கேட்க வேண்டுமா என்பதுதான் பிரச்னை” என்கிறார்.

அதையே தானும் நினைப்பதாகக் கூறும் சம்யுக்தா, இவர்களுக்கெல்லாம் தகுதியே இல்லை. வேல்முருகன் வெளியேறுவதற்கு முன்பே இந்த 3 பேரும் வெளியே சென்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.