தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் 18 வயது பிரபல நடிகை… யார் அந்த நடிகை தெரியுமா…? அட இவரா என ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் விஜயுடன் நடிக்காத நடிகைகளே இல்லை எனலாம். தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து  வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு ஆசைப்படுவார்கள். அந்த வகையில் தற்போது தெலுங்கு திரையுலகில் 18 வயதில் சென்சேஷன் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிக்க ஆசையாக உள்ளது என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும், தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள தி வாரியார் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படங்கள் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.