
விஜய் டிவியின் பிரபல 2வது முன்னணி சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். இந்த தொடரின் தலைப்பில் இருக்கும் ஒற்றுமை சீரியலில் நடித்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா இடையே இல்லை. ஒரே ஒரு சந்தேகம் ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியையும் கெடுத்துவிட்டது. இப்போது டிராக் கொஞ்சம் வில்லி விளையாட்டு இல்லாமல் சாதாரணமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பாரதி கண்ணம்மா தொடரின் ஆரம்பத்தில் பாரதியின் அம்மாவான சௌந்தர்யாவின் மகளாக ஸ்ருதி நடித்து வந்தார், அதற்கு பின் ஒரு சில மாதங்களிலேயே அவரது டிராக் சீரியலில் இருந்து காணாமல் போனது. தற்போது சீரியல் நடிகை ஸ்ருதிக்கு அரவிந்த் என்பவருடன் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.