தொடரும் நடிகைகளின் தற்கொலைகள்..!! பிரபல முன்னணி நடிகை தனது அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை..!! இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்..!!

தொடரும் நடிகைகளின் தற்கொலைகள்..!! பிரபல முன்னணி நடிகை தனது அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை..!! இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல முன்னணி மாடல் நடிகையான பிதிஷா கொல்கத்தாவில்  டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெறும் 21 வயது தான். இவர் மாடல் மட்டுமல்ல வங்காள மொழியில் ஒரு சில படங்களிலும் நடித்து உள்ளார். இந்நிலையில், பிரபல நடிகை பிதிஷா தனது அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து  தகவல் தெரிவிக்கப்பட்டதும் பேரக்பூர் நகர போலீசார் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பிதிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவரது தற்கொலை குறிப்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.  பிதிஷாவுக்கு அனுபாப் பேரா என்ற காதலர் இருப்பதாகவும் அவருடனான நட்புறவால் பிதிஷா ஆழ்ந்த மனஅழுத்தத்தில் இருந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.