தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து இன்றுவரை மக்கள் பலராலும் பெயர் கூறும் அளவிற்கு மிங்க்பெரிய புகழ் பெற்றவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மேலும் இவர் திரையுலகுக்கு வருவதற்கு முன்னர் பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சிவாஜி கணேசனின் மகன்களில் ஒருவர் தான் ராம்குமார் கணேசன்.
இவரின் மகன் தான் தற்போது தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அத்தோடு சிவாஜி கணேசனின் மற்றொரு மகன் தான் பிரபு. இவரது மகனும் சிவாஜி கணேசனின் பேரனுமான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் ஏற்கனவே மிக முக்கிய நடிகராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.