20 வருடங்களுக்கு பின் அஜித்துடன் மீண்டும் இணையும் நடிகர்…!! அஜித்துக்கு தல என பெயர் வைத்தவர் இவர்தான்! யார் தெரியுமா…?

20 வருடங்களுக்கு பின் அஜித்துடன் மீண்டும் இணையும் நடிகர்...!! அஜித்துக்கு தல என பெயர் வைத்தவர் இவர்தான்! யார் தெரியுமா...?

தென்னிந்திய சினிமாவில் பின்னணி எதுவும் இல்லாமல் நடிக்க வந்தவர் நடிகர் அஜித். நடிகர் அஜீத்துக்கு ‘தல’ என்று பெயர் வைத்த நடிகர் தற்போது அஜித் படத்தில் 20 வருடங்களுக்குப் பின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படமான ’தீனா’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் அஜித்துடன் நடித்தவர் மகாநதி சங்கர். இவர் தான் அஜித்தை முதன் முதலில் தல என்று அழைத்தவர் என்பதும், அதன் பிறகுதான் அஜித்தை அவரது ரசிகர்கள் தல என்று அழைக்க ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தில் முக்கிய கேரக்டரில் மகாநதி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 வருடங்களுக்குப்பின் மீண்டும் அஜித்துடன் நடிப்பதை குறித்து அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் படத்தில் அஜித்க்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் வீரா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு 30 சதவீதம் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.