விஜய் டிவி மைனா-வின் பியூட்டி சீக்ரட்.. கருப்பா இருந்தாலும் கலரா மாறலாம்! இவ்ளோ ஈஸியாவா? வைரல் வீடியோ!!!

சின்னத்திரையில் ஒரு காமெடி நடிகையாக வலம் வருபவர் நடிகர் மைனா நந்தினி… சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்… மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் இவர் ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.. நடிப்பைத்தாண்டி இவரின் நகைச்சுவை பேச்சுக்கென்றே தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.. தற்போது அவர் கணவர்   யோகேஷுடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்.

மேலும், தன்னுடைய நிறத்தை மெருகேற்ற பல முயற்சிகளை மைனா நந்தினி மேற்கொண்டிருந்தார். என்ன தான் பியூட்டி பார்லர்? அழகுக்கான சிகிச்சை என்று செய்தாலும் இயற்கை அழகை என்றும் மாற்ற முடியாது. இயற்கை அழகாக மாற கொஞ்சம் தாமதமாகத்தான் ரிசல்ட் கொடுக்கும். ஆனால், உண்மையிலேயே பலன் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

அப்படித் தான் நம்முடைய மைனா நந்தினியும் கலராக மாறி இருக்கிறார். மேலும், இவருடைய அழகுக்கு சீக்ரெட் என்ன? என்று ரசிகர்களும் கேட்டு இருந்தார்கள். இந்நிலையில் மைனா நந்தினி ’மைனா விங்ஸ்’ என்ற தன்னுடைய யூடியூப் சேனலில் ரசிகர் கேட்ட கேள்விக்கு வீடியோ ஒன்று பதிவிட்டு இருக்கிறார்.

ஏபிசி ஜூஸ் என அழைக்கப்படும் ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஜூஸ் தான் என்னுடைய கலர் மாற்றத்திற்கு காரணம். சமீப காலமாக பல சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் இதைத் தான் பேசி வருகிறார்கள். தோல் நீக்கப்பட்ட கேரட், பீட்ரூட், ஆப்பிள், இஞ்சி, புதினா இலை, எலுமிச்சை சாறு என அனைத்தையும் அரைத்து வாரத்திற்கு இரண்டு முறை குடித்தாலே போதும் கலர் சேஞ்ச் ரிசல்ட் நன்றாக கிடைக்கும்.

இதில் எந்த ஒரு செயற்கை கலவையும் இல்லையென்பதால் தைரியமாக எல்லோரும் குடிக்கலாம். அதைத் தான் நானும் பயன்படுத்தினேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. என்ன தான் நிறம் ஒருபக்கம் முக்கியமாக இருந்தாலும் சினிமாவில் திறமையும் முக்கியம் என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று.