தன் காதலனை வெளிப்படையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நடிகை ஸ்ருதி ஹாசன்! விரைவில் திருமணமா? காரணம் இதுதானாம்!

தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் குதித்துள்ளார் நடிகர் கமல் ஹாசன். அவருக்கு அடுத்ததாக இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தற்போது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகையாக தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த கிராக் படம் சூப்பர் ஹிட் அ டித்து வருகிறது. இதையடுத்து, நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து சில க ருத்து வேறுபாடு காரணமாக பி ரிந்துள்ளார்.

இதுபற்றி சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் முன்னாள் காதலர் பற்றி பேசியும் புகைப்படத்தையும் வெளிப்படுத்தினார். தற்போது ஜனவரி 28ல் பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தான் இரண்டாவது முறையாக காதலிப்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறாராம். சமீபத்தில் மும்பையில் இருவரும் கை கோர்த்த படி செல்லும் புகைப்படங்கள் லீக்காகி வருகிறது. மேலும் பிறந்த நாளுக்கு ஸ்ருதிஹாசனை இறுக்கி அணைத்தபடி சாந்தனு அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்…

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்‘‘நான் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிக்கிறேன். எங்கள் இருவருக்கும் பெயிண்டிங், கிராபிக்ஸ், நாவல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு முறை எனது சிநேகிதிக்கு அவர் ஒரு பெயிண்டிங்கை பரிசாக கொடுத்தார். அதன்பிறகு எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் ஆன்லைனில்பேச ஆரம்பித்தோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு காதலிக்க ஆரம்பித்தோம்.

நான் இதற்கு முன் அனேகமான விஷயங்களை மறைத்து வைத்தேன். நீண்டகாலம் சிங்கிள் ஆகவே இருந்தேன். நானும் சாந்தனுவும் திருமணம் செய்து கொள்வோமோ, இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் என் காதலர் பற்றிய விஷயங்களை மறைத்து வைத்தால் அவரை அவமானப்படுத்திய மாதிரி ஆகிவிடும். நான் எந்த மாதிரியான குணநலன்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேனோ அதில் 80 சதவீதம் வரை சாந்தனு ஹசாரியிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்..