சற்று முன் கல்யாணத்தை முடித்த திருமணம் சீரியல் ஜோடி சித்து ஷ்ரேயா!!! ரீல் டூ ரியல்! வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்!!!

முன்னாடி தான், ரீல் ஜோடியெல்லாம் ரியல் லைப் -லயும் ஜோடி சேர்வது அதிசயம்… ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை… ஒரு சீரியல் சேர்ந்து நடித்து ஹிட் ஆகிவிட்டால், அவர்களும் உண்மையிலேயே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.. அப்படி ஒரு ஜோடி தான், நம்  சித்து ஸ்ரேயா…

இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழில் திருமணம் என்ற சீரியலில் முதன் முதலாக ஜோடியாக நடித்தார்கள்.. ஸ்ரேயா அதற்கு முன்னே சன் டிவியில் ஒளிபரப்பான, நந்தினி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது… சித்துவுக்கும், ஸ்ரேயாக்கும், நாயகன், நாயகியாக திரையில் தோன்றிய முதல் தொடர் திருமணம் தான்…

திருமணம் என்ற தலைப்போ என்னவோ? அவர்கள் உண்மையாவே காதலிக்க ஆரம்பித்து விட்டனர்.. அந்த முதல் தொடரிலேயே, இவர்கள் ஜோடி பெருமளவில் வரவேற்கப்பட்டது.. அந்த நிழல் கதாப்பாத்திரங்களை விட,,, நிஜ கதாபாத்திரங்கள் மக்களின் மனதில் ஆழமாய் பதிந்தது.. இந்நிலையில் தான்.. சித்து ஸ்ரேயா இருவரும், எங்கு சென்றாலும்,, ஒன்றாக செல்வது… ஜோடியாக இன்டெரிவியூ என இவர்கள் நிஜத்திலும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது…

அதை உறுதிப்படுத்தும் விதமாக, ஷ்ரேயா பிறந்த நாள் அன்று சித்து ஸ்ரேயாக்கு மிகவும் பிடித்தமான நாய்குட்டி ஒன்றை பரிசளிக்க.. அவரும் அதை வாங்கி, தனது இன்ஸ்டா பக்கத்தில் முதன் முதலாக அவர்கள் இருவரும் காதலிப்பதை ஒத்துக் கொண்டனர்… அதன் பின் சொல்லவே வேண்டாம்.. இவர்களின் ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம்… அதன் பின் சித்து விஜய் டிவிக்கு நடிக்க வர, திருமணம் சீரியல் முடிக்கப்பட்டது…

இப்போது சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 வில் கதாநாயகனாக நடித்து வருகிறார்… அவருக்கு ஜோடியாக ஆல்யா மானசா நடித்துள்ளார்.. ஸ்ரேயா-வும் விஜய் டிவியில் அன்புடன் குஷி சீரியலில் கதா நாயகியாக நடித்து வருகிறார் அவருக்கு ஜோடியாக பிரஜன் நடித்துள்ளார்..

மேலும், எப்போது சித்து–ஸ்ரேயா கல்யாணம்? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று மெகந்தி பங்க்ஷன் நடைபெற்றிருந்தது. நேற்று ரிசப்சன்… இன்று திருமணம் என்று விமர்சையாக நடந்துள்ளது..

அந்த திருமணப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது… அதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை குவித்துக் கொண்டிருக்கின்றனர்…