முதன் முதலாக தன் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த பாரதி கண்ணமா வில்லி நடிகை பரினா! சோ கியூட் புகைப்படம் வைரல்!!!

தமிழில் பல சீரியல்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், அதில் டி.ஆர்.பி யிலும் ட்ரோலிலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது நம் பாரதி கண்ணமா சீரியல் தான்.. உண்மையில் ஒரு சீரியலை, ட்ரோல் பண்ணியே முதல் இடத்துக்கு கொண்டு வந்த சாதனை எல்லாம் இந்த சீரியலுக்கே பொருந்தும்…

ஹீரோ, ஹீரோயின் மற்றவர்கள் யார் பேச்சையும் கேட்காமல்.. வில்லி சொல்வதை மட்டுமே கேட்கும் அளவுக்கு .. அதில் வெண்பா ரோல் மிக முக்கியமானது.. இதில் அந்த கதாப்பாத்திரமாக நடிப்பவர்தான் நடிகை பரினா அசத்… சில மாதங்களுக்கு முன் தான் தான் கர்ப்பமாக இருப்பதைப் பற்றி தெரிவித்திருந்தார்… ஆனால் இன்று வரையும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகை பரினா.

இந்நிலையில் பரீனாவிற்கு இந்த வாரம் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். 7 மாதமாக இருக்கும் போது அதை போட்டோஷூட் மூலமாக ரசிகர்களுக்கு அவர் தெரிவித்தார். தற்போது அவர் 9 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்

இந்த மாதம் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஆனால் சீரியலில் இடைவெளி எடுக்காமல் தொடர்ந்து அவர் நடித்து வருகிறார். சீரியல் குழுவினர் அவர் வயிறு தெரியாமல் இருக்க பல ஏற்பாடுகளை செய்தனர். குழந்தை பிறப்பதற்கு பின் அவர் சீரியலில் இருந்து விலகிவிடுவாரா என பலருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் சீரியலில் இருந்து விலகப் போவது இல்லை எனவும், குழந்தை பிறப்பது வரை இடைவெளி எடுத்துக் கொண்டு சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவருக்கு நலமுடன் குழந்தை பிறக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொழில் மற்றும் குடும்பம் என இரண்டிலும் அவர் சிறப்பாக இருப்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என ஆவலுடன் அவரது ரசிகர்கள் இருந்தன்..

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது, அதை தனது இன்ஸ்டாப் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர்.. இட்ஸ் எ மகன் என்று குறிப்பிட்டுருந்தார்.. அதைத் தொடர்ந்து அவர் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்…

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…