மீண்டும் களத்தில் இறங்கிய பிரபல சீரியல் நடிகர் பிரஜன்! அவருக்கு ஜோடியா யார் நடிக்கிறாங்க தெரியுமா? புது சீரியல் அப்டேட்!!!

விஜய் டிவியில் தற்போது பல காதலை மையமாக வைத்து சீரியல்கள் இருந்தாலும், இதற்கு ஆரம்பப் புள்ளி… காதலிக்க நேரமில்லை, சரவணன் மீனாட்சி போன்ற சீரியல் கள் தான்.. அதிலும் குறிப்பாக.. இந்த இரண்டு சீரியல்களின் டைட்டில் பாடல்களும் வேற லெவல்களில் ஹிட் அடித்தது.. இப்போது கூட என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு பாடல், பலரின் காலர் டோன்னாக இருக்கிறது…

அப்படி அந்த சீரியல் மூலம் சீரியலுக்கு அறிமுகமானவர் தான்.. நடிகர் பிரஜன்! காதலிக்க நேரமில்லை என்ற சீரியலில் தொடங்கி அதன் பின்..திரைப்படத்திற்கு சென்று அங்கு சரியான படவாய்ப்பு கிடைக்காததால்.. சின்ன தம்பி என்ற சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவி க்கு என்ட்ரி கொடுத்தார்.. அதில் அவருக்கு ஜோடியாக, பாவனி… நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதைத் தொடர்ந்து.. அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்தார்.. அதில் அவருக்கு ஜோடியாக முதலில் வேறு ஒரு கதாநாயகி நடித்துவந்தார்.. அதன் பின் லாக்டவுன் காரணமாக… அவருக்கு பதில் சீரியல் நடிகை ஸ்ரேயா நடித்துவந்தார்.. அந்த சீரியலும் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்திருந்தது..

இந்நிலையில் விஜய் டிவியில் மீண்டும் ஒரு புதிய சீரியல் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.. அதுபோக., இந்த சீரியலில் நெஞ்சம் மறப்பதில்லை ஹீரோயின் சரண்யா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்,, என்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை லதா நடிக்கிறார்… அது போக இந்த சீரியலை பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னாள் இயக்குநர் இயக்கவிருக்கிறார்..

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

மேலும் இந்த சீரியல் எந்த வொரு சீரியலின் ரிமேக்கும் இல்லையாம்.. ஒரிஜினல் கதையில் வரவிருக்கிறது என்ற கூடுதல் தகவலும் சொல்லப்படுகிறது.. அதனால் .. பிரஜன் மற்றும் சரண்யா ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…