7ஜி ரெயின் போ காலனி அனிதா-வுடன் புகைப்படத்தை பகிர்ந்த பிக்பாஸ் அனிதா சம்பந்த்!!! ஓ இதான் விஷயமா? குவியும் வாழ்த்துகள்!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெ ளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

அதே போல தன்னுடைய யூடுயூப் பக்கத்தில் மட்டும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக பணிபுரியவில் லை என்றாலும் விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் சீரியல் களில் சில கெஸ்ட் ரோல்களிலும் நடித்து வந்தார்

அதைத் தொடர்ந்து அவர்.. சினிமா-விலும் தன் பங்கை அளித்து வருகிறார்.. அதனால்.. நடிகை சோனியா அகர்வாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்… அதில் அனிதா மீட் 7 ஜி ரெயின் போ காலனி அனிதா என்றும்.. இருவரும் சேர்ந்து ஏதோ ஒரு சினிமா படப்பிடிப்பில் இருந்து போட்டோ எடுத்துள்ளனர். என்பதையும் தெரிவித்துள்ளனர்.. அந்தப்புகைப்படம் இப்போது வைரலாக பரவப்பட்டு வருகிறது…