இரண்டு விருதுகளை பெற்ற நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்!!! புகைப்படத்தை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த சீரியல் ஹீரோ !!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் ஒன்று. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிப்பரப்பாகி வருகிறது… இதில் கதாநாயகனா சரவணன் மீனாட்சி சீசன் 1 மிர்ச்சி செந்தில் அவர்கள் நடித்து வருகிறார்…

அவரைத்தொடர்ந்து… ராஜூ, ரக்சிதா, காயத்ரி ஜனனி, வைசூ போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் சீரியலில் கலக்கி வருகின்றனர்… தற்போது இதில் கத்தி கதாப்பாத்திரத்தில் நடித்துவந்த ராஜூ ஜெயமோகன், பிக்பாஸில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்…

அதனால். சீரியலில் அவர் யாரிடமும்  சொல்லாமல் துபாய் சென்று விட்டதாக, கதையை கொண்டு போகின்றனர்.. இந்நிலையில். அதில் கதா நாயகனாக நடிக்கும் மிர்ச்சி செந்தில் அவர்கள் தனது இன்ஸ்டாப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்…

அதில் கையில் இரண்டு மிகப்பெரிய வெற்றி கோப்பையை வைத்துள்ளார்.. அதில் ஒன்று என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் வின்னருக்கான பரிசும்.. இரண்டாவது நாம் இருவர் நமக்கு இருவர் 250 க்கான பரிசும் எனத் தெரிவித்துள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)

அது போக… இந்த பரிசுகளை தூக்குவதற்கு நான் மிகவும் பெருமை அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.. அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…