பாரதி கண்ணமா சீரியலில் இருந்து விலகும் வில்லி நடிகை!!! அவருக்கு பின் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்!! இதுக்கு அவங்க சரிபட்டு வருவாங்களா?

தமிழில் பல சீரியல்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், அதில் டி.ஆர்.பி யிலும் ட்ரோலிலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது நம் பாரதி கண்ணமா சீரியல் தான்.. உண்மையில் ஒரு சீரியலை, ட்ரோல் பண்ணியே முதல் இடத்துக்கு கொண்டு வந்த சாதனை எல்லாம் இந்த சீரியலுக்கே பொருந்தும்…

பொதுவாக சீரியல் என்றால். அதில் வில்லனாகவோ? இல்லை வில்லியாக நடிப்பவர்களை சுற்றி ட்ரோல்களும், வெறுப்புகளூம்.. செல்லும். ஆனால் இந்த சீரியலை பொறுத்தவரை.. அதில் கதாநாயகனே நெகடிவ் ரோலில் நடிப்பது தான் இந்த ட்ரோல்களுக்கு முக்கிய காரணம்…

அதற்காக இந்த சீரியலில் வில்லி என்ற ரோல் இல்லையா? என்றெல்லாம். இல்லை.. ஹீரோ, ஹீரோயின் மற்றவர்கள் யார் பேச்சையும் கேட்காமல்.. வில்லி சொல்வதை மட்டுமே கேட்கும் அளவுக்கு .. அதில் வெண்பா ரோல் மிக முக்கியமானது.. இதில் அந்த கதாப்பாத்திரமாக நடிப்பவர்தான் நடிகை பரினா அசத்…

சில மாதங்களுக்கு முன் தான் தான் கர்ப்பமாக இருப்பதைப் பற்றி தெரிவித்திருந்தார்… ஆனால் இன்று வரையும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகை பரினா. இப்போது பி ர ச வ த் து க் கா க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு பரினா சிறிது காலம் வி ல க இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது…

மேலும் பரினாவுக்கு பதிலாக வெண்பா கதாப்பாத்திரத்தில் செய்தி வாசிப்பாளர் அனிதா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. என்றாலும் இது குறித்த உண்மை தகவல்கள் இன்னும் வெளியாக்கவில்லை. ஆனாலும் கூடிய விரைவிலேயே அதை அபிஷியலாக பரினா அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது…