காற்றுக்கென்ன சீரியலில் இருந்து விலகும் சீரியல் ஹீரோ!! அவருக்கு பதில் களத்தில் இறங்கும் கலர்ஸ் சேனல் ஹீரோ!!! அட இவரும் பார்க்க அப்படியே இருக்காரே!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் தொடர்களில் காற்றுக்கென்ன வேலி சீரியலும் ஒன்று. சமீபத்தில் தான் இந்த சீரியல் விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டது இந்த சீரியலின் கதைகளம் இன்றைய பெண்களின் நிலைமையை எடுத்து சொல்வதால் மக்கள் மத்தியில் சீக்கிரமாகவே இடத்தை பிடித்தது. இந்தியாவில் பெண்களுக்கான உரிமைகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து வருகிறது. இருந்தும் சில இடங்களில் பல பெண்கள் சாதனை செய்து வருகிறார்கள். அதிலும் ஒருசில இடங்களில் பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து விடுகிறார்கள்.

அதை முறியடிக்கும் வகையில் இந்த சீரியல் அமைந்துள்ளது. நாட்டில் பல இடங்களில் பெண்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு வருகிறார்கள். வெளியில் செல்வதற்கு,படிப்பதற்கு போன்ற பல பிரச்சனைகளை தினம்தினம் சந்தித்து வருகிறார்கள். அதிலும் ஒரு சில பெண்கள் பல கஷ்டங்களை தாண்டி தங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அதை மையமாக வைத்துக் கொண்டு வரப்பட்ட சீரியல்தான் காற்றுக்கென்ன வேலி சீரியல்.

எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஒரு பெண்ணின் போராட்டத்தை பற்றி சொல்வது. இந்த சீரியலில் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், இந்த சீரியலின் ஹீரோ சூர்யவாக நடிப்பவர் ஏற்கனவே விஜய் டிவி யில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்திருந்தார்.. இந்நிலையில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்

 

இனி இவருக்கு பதில்… கலர்ஸ் கன்னட சேனல் நடிகர்… சுவாமிநாதன் என்பவர் தமிழில் புதுமுகமாக களமிறங்குகிறார்.. இவரும் ஏறக்குறைய பார்ப்பதற்கு சூர்யா-வை போலே இருப்பதால். அந்த கதாப்பாத்திரத்துக்கு மேட்ச் ஆவார் என்றும் சொல்லப் படுகிறது.. ஆனாலும்.. ரசிகர்கள் பலரும் அவர் ஏன் விலகினார் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர்…

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…