ரகசியமாய் நடந்து முடிந்த செம்பருத்தி சீரியல் ஹீரோயின் நிச்சயதார்த்தம்!!! மாப்பிள்ளை இவரா? வைரலாகும் புகைப்படம்!!!

ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல்… அதில் ஆதி பார்வதியாக, நடிகர் கார்த்திக் ராஜ்-ம் சபானாவும் ஆரம்பத்தில் நடித்து வந்தனர்… அவர்களின் ஜோடி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வந்தது…

அதன் பின்னே கார்த்திக் அந்த தொரை விட்டு விலகி விட செம்பருத்தி ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி… அதனால் அந்த சீரியல் டி.ஆர்.பி யில் சற்று பின் தங்கியது… இப்போது மீண்டும் பரவலாக சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சபானா-வும் விஜய் டிவி சீரியல் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ஆர்யன் என்பவருக்கும் காதல் என்று சொல்லப்பட்டது… இவர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது… மிஸ் சவுத் இந்தியா பட்டத்தையும் வென்றிருக்கிறார்…

அதை உறுதி செய்யும் விதமாக, ஆர்யன் தன்னுடைய ரசிகர்களுடன் கேள்விக்கேட்டு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு ரசிகை… நீங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்கிறீர்களா? என கேட்க.. அதற்கு அவரோ.. சபானா ஐடி யை டேக் செய்து இவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு சபானாவோ? அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று சொல்லியிருந்தார்

அதைத் தொடர்ந்து ஒரு வழியாக சில தினங்களுக்கு முன் தங்கள் ஜோடியின் புகைப்படத்தை பகிர்ந்து தாங்கள் காதலிப்பதாக ரசிகர்களுக்கு கூறியிருந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்… அதாவது இருவரின் கைகளிலுல் ஒரே மாதிரியான மோதிரம் அணியப்பட்டுள்ளது.. அதோடு. அதில் “அவள் மனதுடன் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஒரு நாள் கெமிஸ்ட்ரி குறையும். மேலும் ஒரு நாள் வெளிப்புற அழகு மங்கிவிடும். ஆனால் மனதுக்கு வயது மாறாது, நித்தியமானது. அது தான் அன்பு வாழும் இடம்.” என பதிவிட்டுள்ளார்….

 

அதைப்பார்த்த பலரும் அவர்களுக்கு நிச்சயம் முடிந்து விட்டதா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…