விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் சீரியலுக்கு வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர்!!! என்ன சீரியல் தெரியுமா?

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் ஒன்று! இதில் ஹீரோ வாக மிர்ச்சி செந்திலும், ஹீரோயினாக ரக்க்ஷிதாவும் நடித்துவருகின்றனர்.. அது போக.. காயத்ரி, ராஜூ, ஜனனி அசோக் குமார், வைஷூ சபிதா ஆனந்த் போன்றோர் அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்..

முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் ஓடிக்கொண்டிருக்கிறது… அதில் மாசானி என்ற கதாப்பாத்திரத்தில் பார்த்திபன் சண்முகவேலு, நடிக்கிறார்… இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகத்திலும் தேவியின் மாமா வாக நடித்துள்ளார்…

இந்நிலையில் ஜீ தமிழில் அன்பே சிவம் என்ற புது சீரியலில் இவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.. அதில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சீசன் 1 ல் அரவிந்த் மற்றும் மாயனின் தம்பியாக நடித்த மதனும் இந்த சீரியலில் நடித்துள்ளார்..

அது போக பூவே பூச்சூடவா சீரியலில் மீனு கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகையும் இணைந்துள்ளார்.. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…