நான் கொஞ்சம் கணக்கு ல வீக்கு!!! பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்த குக் வித் கோமாளி ரித்திகா!!! வைரலாகும் பள்ளி பருவ புகைப்படம்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு பார்வையாளர்களை கொண்டுள்ள சீரியலாக பாக்கியலட்சுமி விளங்கி வருகிறது.  பல திருப்புமுனை கொண்டு நகர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலை மக்கள் ஆர்வத்துடன் கண்டு கழித்து வருகின்றனர். அது போக.. பாரதி கண்ணாமாவுக்கு அடுத்த இடத்தில்.. ரசிகர்களில் மட்டுமில்லாமல்.. டி.ஆர்.பி யிலும் கலக்கிக்கொண்டுள்ளது…

இந்த சீரியலில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், இளம் நடிகை ரித்திகா. இவர், ராஜா ராணி சீரியல் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்… மேலும்.. அவரின் எதார்த்தமான குணத்திற்கும், எளிமையான விதத்திற்குமென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது…

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

மேலும் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்களுடன் கேள்விக்கு பதில் விளையாடியுள்ளார்.. அதில் நீங்கள் பத்தாம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண் என்றுக் கேட்டுள்ளார்.. அதற்கு நான் மிகவும் சுமாராக படிக்கும் பெண் என்றூம் அதிலும் கணக்கு பாடத்தில் நான் மக்கு என்றும் அவரே குறிப்பிட்டுள்ளார்..

அதைத்தொடர்ந்து நீங்க நடிக்க வராமல் இருந்தால் என்னவாகியிருப்பீர்கள் என்ற கேள்விக்கு டீச்சராகியிருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.. அதுபோக.. அவரின் படிப்பு தகுதி என்ன? பள்ளி பிடிக்குமா? கல்லூரி பிடிக்குமா? உங்கள் பள்ளி தோழியின் பெயர்கள் என்ன என்றெல்லாம் கேட்டுள்ளனர்.. அதற்கும் பதிலளித்த அவர் பள்ளி சீருடையில் இருந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்…