அதென்னவோ? இந்த வீடியோ வ எத்தனை தடவ வேணும்னாலும் பார்க்கலாம்!!! இணையத்தில் வைரலாகி வரும் செந்தில் ஸ்ரீஜாவின் லாக்டவுன் கியூட் வீடியோ!!! உள்ளே…

சரவணன் மீனாட்சி அப்படின்னு சொன்னாலே கண்ணு முன்னாடி, செந்தில் ஸ்ரீஜா தான் வருவாங்க!!! அந்த அளவுக்கு, அவங்களோட உண்மையான பெயரையே மறக்க வச்சிட்டாங்க.. அந்த அளவுக்கு அந்த கதாப்பாத்திரங்கள், நம்ம மனசுல அவ்வளவு ஆழமா பதிஞ்சி போயிடுச்சி…

 

நமக்கு மட்டுமில்ல, அவங்களுக்கும் கூட பல இடத்துல, இன்னும் சரவணன் மீனாட்சி யா தான் தோனும்னு, அவங்க நிறைய இன்டெர்வியூல சொல்லிருக்காங்க… அதுக்கும் மேல, சம்திங் ஸ்பெஷல் ஜோடி இவங்க… அதென்னவோ? இப்பலாம், நிறைய செலிபிரிட்டி ஜோடி வந்துட்டும், போயிட்டும் இருக்காங்க.. ஆனா இவங்களோட இடத்தை கண்டிப்பா இவங்களை தவிர வேற யாராலையும் பில் பண்ணவே முடியாது…

செந்தில் ஸ்ரீஜா.. இவங்களை பத்தி, சொல்லனும்னா கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் டிவி-யில மதுரை அப்படின்ற சீரியல் ல சரவணன் மற்றும் மீனாட்சி யா இந்த உலகத்துக்கு அறிமுகம் ஆனாங்க… அந்த சீரியலோட வெற்றிக்கு அப்புறம், அதே தொலைக்காட்சியில 2012-ம் ஆண்டு சரவணன் மீனாட்சி சீரியல் பண்ணாங்க.. அது இந்திய தொலைக்காட்சி வரலாற்றுலையே பல புதுமைகளை கொண்டு வந்தது…

விஜய்டிவியில் முதன் முதலாக ஐநூறு அத்தியாயங்களை கடந்த முதல் சீரியல்.. அதைத் தொடர்ந்து சீசன் 2 சீசன் 3 என 1200 எபிசோட்களை கடந்து ஒளிப்பரப்பானது… இவர்கள் முதல் 520 அத்தியாயங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது… அதன் பின் இருவரும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நேரம் இவர்களின் நிஜ கல்யாண புகைப்படம் இணையத்தில் பரவியது…

அது குறித்து கேட்கையில் ஜூலை 2ம் தேதி 2014 ஆம் ஆண்டு திருப்பதியில் பெற்றோர்களின் முன்னிலையில் மிக எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்டனர்.. உண்மையில் பல பேரின் ஆசை… அதன் பின்,  இவர்கள் இருவரும் சேர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி மீண்டும் அதே தொலைக்காட்சியில், மாப்பிள்ளை என்ற சீரியல் நடித்தனர்…

அதன் பின், இருவரும் சேர்ந்து கல்யாணம் கன்டிசன் அப்ளை வெப் சீரிஸ் நடித்தனர்… அதன் பின் சீரியலில் எப்போது வருவார்கள்? என எதிர்பார்க்கும் போது, செந்தில் மட்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிக்க ஆரம்பித்தார்.. ஸ்ரீஜா-விற்கு நடிக்க விருப்பல் இல்லாத காரணத்தால் அவர் நடிக்கவில்லை…

இப்போது கூட சில மாதங்களுக்கு முன் இருவரும் சேர்ந்து நடித்த கல்யாணம் கன்டிஷன் அப்ளை சீசன் 3 மிர்ச்சி தமிழ் யூடியூப் சேனலில் வெளியானது… இப்போது, அவர் கடந்த ஊரடங்கின் போது இருவரும் சேர்ந்து வெளியிட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது… அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)