முதன் முதலாக தங்கள் குழந்தையின் பெயரை செம்ம கியூட் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள அன்வர் சமீரா ஜோடி! வைரல் புகைப்படம் உள்ளே!!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘பகல்நிலவு’. இந்த சீரியலில் உண்மையான காதலர்களான அன்வர் மற்றும் சமீரா முக்கிய வேடங்களில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

காதலர்களாக இருந்த அன்வர் மற்றும் சமீரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் சமீரா தான் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் மூலம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த ஜோடிக்கு கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது… அந்த நல்ல செய்தியை குழந்தையின் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்..

 

View this post on Instagram

 

A post shared by Syed Anwar (@syedanwarofficial)

இதனை சமீராவின் கணவர் அன்வர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் தங்கள் மகனுக்கு சையத் ஆரான் என்று பெயர் வைத்துள்ளதாக, தன் மகனுடன் எடுத்த குயூட் புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்..